பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு, 'மாஸ்க்'; சத்தி இன்ஜினியர் கண்டுபிடிப்பு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (4)
Advertisement
corona,coronavirus,China

சத்தியமங்கலம் : 'கொரோனா' வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடித்த 'மாஸ்க்' குக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திருநகர் காலனியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24; மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், இரண்டு ஆண்டுகளாக, கோவையில், தனியார் கார்பன் பேப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார்.


ஆராய்ச்சி


ஒரு கட்டத்தில், பணியில் இருந்து நின்றவர், இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தார். தற்போது, சீனாவில், 'கொரோனா' வைரஸ் தாக்குதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, 'மாஸ்க்' அணியும்படி சீன அரசு அறிவித்துள்ளது. இதனால், சீனாவில், 'மாஸ்க்' தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, விக்னேஷ் ஆராய்ச்சியில் இறங்கினார். பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை வைத்து, 'மாஸ்க்' கண்டுபிடித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: சாதாரண, 'மாஸ்க்'குகளில், 400 நானோ மைக்ரான் அளவுள்ள துகள்கள் ஊடுருவும். கொரோனா வைரஸ், 120, 'நானோ மைக்ரான்' அளவுள்ளது. இதனால், மனிதர்கள் சுவாசிக்கும்போது, நோய் தொற்றிக்கொள்ளும்.தற்போது, சீனா பயன்படுத்தும் மாஸ்க், 300 நானோ மைக்ரான் அளவு மட்டுமே இருப்பதால், 80 சதவீத நோய் தொற்றையே தடுக்க முடியும்.

நான் கண்டுபிடித்துள்ள மாஸ்க்கில், கிராபெனினை பொடியாக்கி தடவலாம். அல்லது கண்ணாடி டேப் மூலமாக, மாஸ்க் மீது ஒட்ட வைத்து பயன்படுத்தலாம். கிராபெனின் மூலம், ௦.142, 'நானோ மைக்ரான்' மட்டுமே செல்லும் என்பதால், நோய் தொற்றில் இருந்து, 95 சதவீதம் காத்துக் கொள்ள முடியும்.


சீனாவுக்கு பரிந்துரை


இந்த கண்டுபிடிப்பை, 'ரிசர்ச் கேட்' இணையதளத்தில் பதிவிட்டேன். இதை, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதன் முடிவில், இந்த மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம், 95 சதவீதம், 'கொரோனா' வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக் கொள்ள முடியும் என உறுதிப்படுத்தினர். சீன அரசுக்கும் பரிந்துரைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். என் கண்டு பிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது, சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-202007:53:05 IST Report Abuse
Rs Sampathkumar 👍
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202005:58:35 IST Report Abuse
ஆப்பு கண்டுபிடிப்பு உதவும்.. ஆனா, விலை கட்டுப் படியாகாது. கிராஃபின் ரொம்ப விலை அதிகமானது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-பிப்-202002:29:46 IST Report Abuse
தமிழ்வேல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X