சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோட்ட தொழிலாளர்களிடம் நக்சல்கள் பிரசாரம்

Added : பிப் 11, 2020
Advertisement

பந்தலுார் : தோட்ட தொழிலாளர்களை குறி வைத்து, நக்சல்கள் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளனர். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில், பழங்குடியின கிராமங்களில் பதுங்கியுள்ள நக்சல்கள், தங்கள் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல் முறையாக, வயநாடு பகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பமலை தோட்டத்தில், நக்சல்கள் பிரசாரத்தை துவக்கிஉள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், அங்குள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள், தோட்ட அலுவலகங்களில், தங்கள் கோரிக்கைகள் குறித்த போஸ்டர்களை ஒட்டி சென்றுள்ளனர்.அதில், 'பழங்குடியினர், இலங்கையில் இருந்து, தாயகம் திரும்பிய தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. கொத்தடிமைகளாக செயல்படும் நிலையில், தோட்டம் அமைந்துள்ள நிலப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு வரும் அதிகாரிகளை புறக்கணிக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்காக, எங்கள் இயக்கம் தொடர்ந்து போராடும்' என, மலையாளத்தில் எழுதி உள்ளனர்.பழங்குடியினர் மத்தியில் பிரசாரம் செய்து வந்த நக்சல்கள், முதல் முறையாக, தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் களம் இறங்கியுள்ளதால், தமிழக போலீசார் உஷார் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X