பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிர்வாகத்திடம் சமூக கூடம் ஒப்படைப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

மாமல்லபுரம் : கடம்பாடியில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, பயன்பாடு இன்றி சீரழிந்த சமுதாய நலக்கூடம், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாக பொறுப்பில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது.உறுதிமொழிஇந்த கோவில் அருகில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி நடத்த, பக்தர்கள் விரும்பும் நிலையில், இங்கு சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, 2013 - 14ல், தொகுதி மேம்பாட்டு நிதி, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.கோவில் நிர்வாக இடத்தில், இக்கூடம் அமைக்க அனுமதித்த அறநிலைய நிர்வாகம், கட்டுமான பணிக்கு பின், தங்கள் துறையிடமே ஒப்படைக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம், உறுதிமொழி பெற்றது.திருக்கழுக்குன்றம், வட்டார வளர்ச்சி நிர்வாகம், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்றாண்டுகளுக்கு முன், கூடத்தை அமைத்தது.

ஆனால், ஒப்பந்தத்தின்படி, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. கோவில் நிர்வாகம் எதிர்ப்பு காரணமாக, இந்த கூடம் பயன்பாடு இன்றி சீரழிந்தது.இந்நிலையில், கூடத்தை கையகப்படுத்த முடிவெடுத்து, வட்டார வளர்ச்சி நிர்வாகத்திற்கு, கோவில் நிர்வாகம் அறிவிப்பாணை வழங்கியது.ஆய்வுஇதையறிந்த, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லுாயிஸ், கோவில் நிர்வாகத்திடம், சமுதாயக் கூடத்தை ஒப்படைக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று, ஊராட்சி செயலர் செந்தில், கோவில் செயல் அலுவலர்சங்கரிடம், கூடத்தை ஒப்படைத்தார்.செயல் அலுவலர், சமுதாய கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின், ''பழுதுபார்த்து, சுற்றுச்சுவர் அமைத்து, விரைவில் பயன்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X