பொது செய்தி

தமிழ்நாடு

கோழி தீவன செலவை பாதியாக குறைக்கலாம்

Added : பிப் 11, 2020
Advertisement

தீவன சோளம் சாகுபடி குறித்து, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த, முட்டை கோழி வளர்க்கும் பண்ணை விவசாயி மணி கூறியதாவது:முட்டைக் கோழி வளர்ப்பிற்கு, தீவனத்திற்கு தான் அதிக பணம் செலவாகிறது. 1 டன் ரெடிமெட் கோழி தீவனம் வாங்கினால், ஒரு நாளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டும்.ஆதலால், சோளம், அரிசி குருனை தீவனங்களை நாமே சாகுபடி செய்து, புரதம் மற்றும் பிற சத்துகளை சேர்த்து அரைக்கும் போது, கோழி தீவன செலவை பாதியாக குறைக்கலாம்.அதே தீவனங்களை, நாமே சாகுபடி செய்து, அடர் தீவனமாக தயாரித்து விற்றால், இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.ஒரு ஏக்கருக்கு, 30 மூட்டை சோளம் வரை மகசூல் எடுக்கலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். அதே மகசூல் எனக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு:87547 45570

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X