அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியுடன் பா.ம.க., கூட்டணியா? நழுவிய ராமதாஸ்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
Rajini,Rajinikanth,Ramadoss,ரஜினி,ரஜினிகாந்த்,ராமதாஸ்

சென்னை: ''நடிகர் ரஜினி கட்சி துவக்கியதும், அவருடன் கூட்டணி அமைக்க, பத்திரிகையாளர்களின் யோசனையை ஏற்கிறேன்; இல்லை இல்லை... அது குறித்து யோசிக்கிறோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார்.


அவர் அளித்த பேட்டி:


* ரஜினியுடன், பா.ம.க., கூட்டணி அமைக்கும் என, தமிழருவி மணியன் கூறியுள்ளாரே?
நீங்கள் கேட்கிற கேள்வி மிக முக்கியமான கேள்வியா...

* இதுகுறித்து, இரண்டு நாட்களாக விவாதிக்கப்படுகிறது; பா.ம.க., மவுனமா இருப்பது பற்றி?
அது முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்பதால், பதில் அளிக்கவில்லை.

* ரஜினியுடன், பா.ம.க., சேருவது முக்கியத்துவம் இல்லையா?
இப்போது, அதுபற்றி எப்படி பேசுவது; அவர் கட்சி துவக்கவில்லை. கட்சி துவக்கிய பின் கேட்டால், அது குறித்து கருத்து சொல்லலாம். தமிழருவி மணியனுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு தோன்றியதை சொல்லி உள்ளார். இப்போது, நாங்கள் அதற்கு என்ன சொல்ல முடியும்.


latest tamil news



* 'பாபா' படம் வெளியான நேரத்தில், ரஜினியை விமர்சித்தீர்கள். இப்போது, உங்கள் நிலைப்பாடு என்ன?
கொஞ்சம் பொறுங்கள். முதலில், அவர் கட்சி துவக்கட்டும். கட்சி துவங்கிய பின், அவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்து, பின்னர் சொல்கிறோம்.

* ரஜினி கட்சி துவக்கியதும், கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்துவீர்களா?
உங்கள் யோசனையை ஏற்கிறேன். இல்லை இல்லை... அது குறித்து யோசிக்கிறோம்.

* உங்கள் மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியா?
அது, உங்கள் கருத்தாக இருக்கலாம்.

* திரைமறைவில் பேச்சு துவங்கி விட்டது என, தமிழருவி மணியன் பேட்டி அளித்தது பற்றி?
எந்த பேச்சும் துவங்கவில்லை.

* வரும், 2021ல் பா.ம.க., ஆட்சியை பிடிக்கும் என, நீங்கள் பேசி வருவது பற்றி?
பா.ம.க., துவங்கி, 32 ஆண்டுகள் ஆகிறது. தொண்டர்களை உற்சாகப்படுத்த, ஆட்சியை பிடிப்போம் என, சொல்வது வழக்கமானது தான். இவ்வாறு, ராமதாஸ் பேசினார்.

பொதுவாக, நடிகர்களை கூத்தாடிகள் என விமர்சிப்பது, ராமதாஸ் வழக்கம். ரஜினியையும், ராமதாஸ் விமர்சித்துள்ளார். இன்று(பிப்.,11) அளித்த பேட்டியில், ரஜினியை பற்றி, எந்த ஒரு கருத்தையும், ராமதாஸ் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-பிப்-202020:01:42 IST Report Abuse
Sampath Kumar இந்த தமிழ் அருவி சனியனை ரஜினி பக்கத்தில் வைத்து கொண்டால் இப்படித்தான் நிகழும்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
12-பிப்-202016:01:53 IST Report Abuse
ரத்தினம் அதிமுக ஊழல் கரை படியாத கட்சி அல்ல. திமுக வின் கிளை தான். திமுக என்ற ஒரு கட்சி இல்லாய்ன்னா தமிழகத்தில் ஊழல் விஷ செடி வளர்ந்திருக்காது. இப்போது திமுக ஒரு விஷ ஆல மரம்.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202015:23:46 IST Report Abuse
தமிழ் இந்த ஊமதாஸ் தன் மகன் மாங்காமணிக்காக தன் கட்சியின் கொள்கை இனம் அனைத்துக்கும் சாவுமணி அடித்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X