பொது செய்தி

தமிழ்நாடு

2 ஏக்கர் அரசு நிலம் மீட்க அளவீடு

Added : பிப் 11, 2020
Advertisement

புதுமாவிலங்கை : புதுமாவிலங்கை அருகே, 2 ஏக்கர், அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்க அளவிடும் பணி நடந்தது.

கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியிலிருந்து, சத்தரை ஊராட்சி வரை, விளை நிலங்களில் பொருட்கள் கொண்டு செல்வதற்காக வண்டிபாட்டை பாதை அமைக்கப் பட்டிருந்தது.இந்த வண்டிபாட்டை பாதையை, இப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.இந்நிலையில், இந்த வண்டிபாட்டை நிலத்தை மீட்க வலியுறுத்தி, விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.

இதையடுத்து, கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், தாசில்தார் விஜயகுமாரி, துணை தாசில்தார் வெங்கடேஸ், தலைமை நிலைய சர்வேயர் செந்தில் உட்பட, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், புதுமாவிலங்கை முதல், சத்தரை வரை வண்டிபாட்டை பாதை நிலத்தை அளவீடும் செய்யும் பணி, கடம்பத்துார் போலீசார் பாதுகாப்புடன் நடந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம், கடம்பத்துார் போலீசார் பேசி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து, 2 ஏக்கர் நிலம் வண்டிப்பாட்டை பாதை அளவீடும் செய்யும் பணி நடந்தது. வரும் காலங்களில் நிலம் மீட்கப்பட்டு, வண்டிப்பாட்டை பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் விஜயகுமாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X