பொது செய்தி

தமிழ்நாடு

திறன் போட்டியில் சான்று வழங்கல்

Added : பிப் 11, 2020
Advertisement

திருவள்ளூர் : மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக, எட்டு இடங்களில், போட்டித் தேர்வு நடைபெற்றது.முதல் கட்டமாக, மாவட்ட அளவிலான, 47 திறன் பிரிவுகளில், திருவள்ளூர் மாவட்டத்தில், 777 பேர் பங்கேற்றனர்.அதில், ஒவ்வொரு திறன் தலைப்பிலும், 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, கடந்த மாதம், இரண்டாம் கட்ட திறன் தேர்வு நடந்தது. இதில், முதல் இரண்டு இடங்கள் பெற்றவர்களைப் பாராட்டி, கலெக்டர் மகேஸ்வரி, சான்றிதழ் அளித்தார்.

இவர்கள், மாநில அளவில் நடக்கவிருக்கும் திறன் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அதில், வெற்றி பெறுபவர்கள், சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில், 2021-ம் ஆண்டு நடைபெறும் சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்பர் என, கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X