பொது செய்தி

தமிழ்நாடு

'வடாரண்யேஸ்வரர் கோவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்'

Added : பிப் 11, 2020
Advertisement

திருவாலங்காடு : 'வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்' என, ஒன்றிய குழுத் தலைவர் தெரிவித்தார்.

திருவாலங்காடு ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா விஜயராகவன், ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் துறைக்கு கட்டப்படும் கட்டடம், புதியதாக அமைய உள்ள மருத்துவமனை கட்டப் பணிகள், வடாரண்யேஸ்வரர் கோவில் வளாகம் உட்பட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று, ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பதை கேட்டறிந்தார்.பின், ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா விஜயராகவன் கூறியதாவது:ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள், படிப்படியாக நிறைவேற்றப்படும். குறிப்பாக, வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.முதலில், இரண்டு அடிப்படை வசதிகள் ஒன்றிய நிர்வாகம் மூலம் விரைவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திதேவநாதன், பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X