பொது செய்தி

தமிழ்நாடு

போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

Added : பிப் 11, 2020
Advertisement
 போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

திருத்தணி : அரசு பள்ளிகள் இடையே மாநில அளவில் நடந்த ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியில், முதலிடம் பிடித்த, கே.ஜி.கண்டிகை பள்ளி மாணவிக்கு, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

மனிதவள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், மாநில அளவில், அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவ- - மாணவியர் இடையே ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி, 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம் நடந்தது.இதில், திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி, 7ம் வகுப்பு மாணவி சியாமளா உட்பட மொத்தம், ஒன்பது பேர் பங்கேற்றனர். இதில், மாநில அளவில்,ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியில், கே.ஜி.கண்டிகை அரசு பள்ளி மாணவி சியாமளா முதலிடம் பிடித்தார்.மாணவி சியாமளாவை பாராட்டி, நேற்று, பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாதேவி ரொக்கப் பரிசு, சிறப்பு சான்றிதழ், தங்க நிற மெடல் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், இதே பள்ளி மாணவர்கள், மேற்கண்ட போட்டியில் பங்கேற்ற, எட்டு மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சிறப்பு சான்றுகளை, உதவி தலைமை ஆசிரியர் முகுந்தன் வழங்கினர். நிகழ்ச்சியில், கணித பட்டதாரி ஆசிரியர் நரசிம்மன், மாநில செயலர் சாந்தா, கலை ஆசிரியர்கள் சீனிவாசன், அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X