மணவாள நகர் : மணவாள நகரில் திருட்டு சம்பவத்தில் போலீசாரிடம் பொதுமக்களால் பிடித்து கொடுக்கப்பட்ட திருடன், 'கடைகளில் மட்டுமே கொள்ளையடிப்பேன்' என, போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
நடைபயிற்சிதிருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் பகுதியில் ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையோரம் உள்ள கோபால் என்பவர் நடத்தி வரும் கடை முன் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் இருவர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, நடைபயிற்சி மேற்கொண்டவர்களில் சிலர், அந்த இருவரையும் கவனித்தனர். அப்போது, அந்த இருவரும் அருகில் உள்ள காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஆயில் கடையில், பூட்டை உடைத்து, உள்ளே சென்று, பணத்தை திருடி வந்தனர்.
இதை கவனித்த பொதுமக்கள் சிலர், அந்த இருவரையும் விரட்டினர். இதில், இருவரும் பெரியார் தெரு வழியாக தப்பியோடினர். பொதுமக்கள் விரட்டிச் சென்றதில் ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்றொருவன் தப்பியோடி விட்டான்.இதையடுத்து, பொதுமக்கள், பிடிபட்டவனை நன்றாக கவனித்து, மணவாள நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவன், சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மதன்குமார், 18, என தெரிய வந்தது.
வைஷ்ணவி நகர்மேலும், தப்பியோடியவன், வெங்கத்துார் கண்டிகை வைஷ்ணவி நகரைச் சேர்ந்த முருகேசன், 21 என்பதும் தெரிய வந்தது.இருவரும், சில தினங்களுக்கு முன், மணவாள நகர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.மேலும், நேற்று அதிகாலை, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள வாகனம் நிறுத்து மிடத்தில், இருசக்கர வாகனத்தை திருடி வந்து, மேல்நல்லாத்துார் பகுதியில் காய்கறி கடை உட்பட இரு கடைகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது.
மேலும், மணவாள நகர் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட போது பிடிபட்ட தாகவும், மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.மேலும், மதன்குமாரிடமிருந்து, ஆயில் கடையில் திருடிய 1,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், பிடிபட்ட திருடன் மதன்குமார், 'கடைளில் மட்டுமே கொள்ளையடிப்பேன்' என, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், கடந்த நான்கு தினங்களுக்கு முன்தான் சிறையிலிருந்து வெளியே வந்ததாகவும் மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE