பொது செய்தி

தமிழ்நாடு

600 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி ஆணை வழங்கும் விழா

Added : பிப் 11, 2020
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : பிரதம மந்திரியின், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்போருக்கு, மத்திய, மாநில அரசுகள், வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதில், மத்திய அரசின், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு, 2.10 லட்சம் ரூபாய் மானியமாக கிடைக்கிறது.இத்திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு தாலுகாக்களில், 7,055 வீடுகள் கட்ட, பயனாளிகளுக்கு, அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 600 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி ஆணை வழங்கும் விழா, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா பங்கேற்று, பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணையை வழங்கினார். ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., - எம்.எம்.ஏ., பழனி, குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் சுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X