போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 11, 2020
Share
விபத்தில் வாலிபர் பலிமறைமலைநகர்: மதுராந்தகம் அடுத்த, காவாதுார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 9ம் தேதி, பணி முடிந்து, 'ஹீரோ' இருசக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே, நிலைத்தடுமாறிய வாகனம் விழுந்தது.இதில், படுகாயமடைந்த தினேஷை, அவ்வழியே சென்றோர் மீட்டு, தீவிர

விபத்தில் வாலிபர் பலிமறைமலைநகர்: மதுராந்தகம் அடுத்த, காவாதுார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 9ம் தேதி, பணி முடிந்து, 'ஹீரோ' இருசக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே, நிலைத்தடுமாறிய வாகனம் விழுந்தது.இதில், படுகாயமடைந்த தினேஷை, அவ்வழியே சென்றோர் மீட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று தினேஷ் இறந்தார்.

துாக்கிட்டு ஒருவர் தற்கொலைமறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த, நின்னக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம், 47; பேன்சி கடை நடத்தி வந்தார்.இவர், வீட்டு மனை வாங்கியதற்கு கடன் கொடுக்க முடியாமல், மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர், வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்தார். மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மயங்கி விழுந்தவர் இறப்புகாட்டாங்கொளத்துார்: காட்டாங்கொளத்துார் பஸ் நிறுத்தம் அருகில், கடந்த, 9ம் தேதி, 60 வயது மதிக்கத்தக்க ஆண், மயங்கிய நிலையில் கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், முதியவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் சேவை வாகனம் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், தீவிர சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்நபர், நேற்று இறந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விபரங்களை, போலீசார் விசாரிக்கின்றனர்.லாட்டரி விற்றவர்களுக்கு, 'காப்பு!'செங்கல்பட்டு: செங்கல்பட்டு, அனுமந்தபுரம்,புத்தேரி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, ரோந்து பணியில் சென்ற செங்கல்பட்டு நகர போலீசார், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வெற்றிவேல், 40, பிலாப்பூர் சுபான், 32, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

காரில் பயணித்தவர் மரணம்மதுராந்தகம்: அம்பத்துார் அடுத்த, கொரட்டூரைச் சேர்ந்தவர் பாலாஜி 43.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, காரில் சென்றார். இவரது ஓட்டுனர், காரை ஓட்டினார்.மதுராந்தகம் அருகே, ஆத்துார் சுங்கச்சாவடியை கடந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு பஸ் மீது, கார் மோதியது. இந்த விபத்தில் பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கார் ஓட்டுனர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்புவாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் முருகன், 25; எலக்ட்ரீஷியன்.இவர், நேற்று முன் தினம் மாலை, வீட்டில் உள்ள மின் ஒயரில் ஏற்பட்டிருந்த பழுதை சரிபார்த்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கி விழுந்தார். அக்கம் பக்ததினர் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.மருத்துவர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியில் முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ரூ.1.50 லட்சம் மோசடிதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகரைச் சேர்ந்தவர் முகுந்தன்பாபு மனைவி சங்கீதா, 30. இவருக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக, அதே பகுதியைச் சேர்ந்த, பார்த்தசாரதி மனைவி ரோகினி, 30 என்பவர், மூன்று மாதங்களுக்கு முன், 1.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.ஆனால், குறிப்பிட்டபடி, வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தையும், திரும்பத் தரவில்லை என, கூறப்படுகிறது.இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசில், சங்கீதா அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.காட்டன் சூதாட்டம்: இருவர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூர் நகர போலீசார் நேற்று முன்தினம், பெரியகுப்பம், மசூதி தெரு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பெரியகுப்பம், லட்சுமணன்,56, திருவள்ளூர் அனீபா, 65 ஆகியோர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை, போலீசார் விசாரித்த போது, மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதையடுத்து, இருவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

போலீசை மிரட்டியவர் பிடிபட்டார்கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 38. நேற்று முன்தினம் இரவு, பெரவல்லுார் சந்திப்பில், 'குடி'போதையில் சிலரிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது, ரோந்து பணியில் இருந்த கவரைப்பேட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் பாலாஜி, 42, தகராறை தடுக்க முயன்றார்.அவரை, சசிகுமார், கத்தி முனையில் மிரட்டியுள்ளார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், சசிகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மணல் திருடிய மூவர் சிக்கினர்ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தையொட்டி, கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த மூன்று டிப்பர் லாரிகளை போலீசார் மடக்கினர்.போலீசை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் துரத்திச் சென்று பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள், தாமரைப்பாக்கம் சவுந்தரராஜன், 34, மணிகண்டன், 36, புன்னபாக்கம் தனசேகர், 34 என்பது தெரிய வந்தது.இதுகுறித்து, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, லாரிகளை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கைது செய்தனர்.சாலை விபத்துகளில் மூவர் பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த, பாபிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் நரசிம்மன் மகன் கோபி,35. இவர், நேற்று காலை, மனைவி பார்வதியுடன், திருத்தணி பஜாருக்கு, டிவிஎஸ் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் சென்றார்.அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, பாபிரெட்டிப்பள்ளி அருகே, ஏரிக்கரையின் மீது செல்லும் போது ஒரு வளைவில், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், மனைவி பார்வதி கண் முன், கணவன் கோபி, சம்பவ இடத்திலேயே இறந்தார். பார்வதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.l திருத்தணி: வேலுார் மாவட்டம், நந்திவேடுதாங்கல், அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் கோபால் மகன் பிச்சாண்டி, 30. கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், மரம் வெட்டுவதற்காக, ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், திருத்தணி வட்டம், மாம்பாக்கம் - பரவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, ராமகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோர புளி மரத்தின் மீது மோதியதில், பிச்சாண்டி பலத்த காயம் அடைந்தார்.ஆபத்தான நிலையில், '108' ஆம்புன்லஸ் சேவை மூலம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, பிச்சாண்டி இறந்தார். இவ்விரு விபத்துகள் குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.l நகரி: ஜார்க்கண்ட் மாநிலம், அஜாரி மாவட்டம், ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் யாதவ், 25. இவர், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் அருகே உள்ள சிகரப்பள்ளி கிராமத்தில், ஜே.சி.பி., மூலம் சாலையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.உணவு இடைவேளையின் போது, வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, ராஜேஷ்குமார் யாதவ் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த கிரேன் வாகனம் மோதியதில், ராஜேஷ்குமார் யாதவ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.காணிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்ற 6 பேருக்கு கம்பிநகரி: சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, ஒ.ஜி.குப்பம் கிராமத்தில், கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சித்துார் மாவட்ட ஏ.எஸ்.பி., கிருஷ்ணா அர்ஜூன்ராவ் உத்தரவின்படி, நகரி காவல் ஆய்வாளர் மத்தைய்யா ஆச்சாரி தலைமையில், எட்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட போலீசார் ஒ.ஜி.குப்பத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த, 28 - 70 வயதுள்ள ஆறு பேரை கைது செய்தனர்.மேலும், இவர்களிடம், 12 கிலோ கஞ்சா, 11 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X