பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னேரியில் மின் கம்பி மாற்றம்

Added : பிப் 11, 2020
Advertisement

பொன்னேரி : மின் பாதைகளில் பழுதடைந்து உள்ள மின் கம்பிகளை மாற்றம் செய்வதற்காக, இன்றும், நாளையும், இரண்டு நாட்கள் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளன.

பொன்னேரி துணை மின் நிலையத்தில் இருந்து, உத்தண்டிகண்டிகை மற்றும் எலவம்பேடு பகுதிகளுக்கு செல்லும் உயர் மின் அழுத்த பாதைகளில் உள்ள கம்பிகள் பழுதடைந்து கிடப்பதால், அதை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.மின் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை மாற்றம் செய்வதற்காக இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்கள், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை மின்தடை ஏற்படும் என, மின் வாரியம் அறிவித்து உள்ளது.

இதனால், அனுப்பம்பட்டு, திருவேங்கிட புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், சிங்கிலிமேடு, புலிக்குளம், பொன்நகர், உத்தண்டிகண்டிகை, எலவம்பேடு, மேட்டுப்பாளையம். கந்தன்பாளயைம், சாணார்பாளையம், உப்பர பாளையம் ஆகிய பகுதிகளில், மேற்கண்ட இரண்டு நாட்கள் மின் வினியோகம் இருக்காது என, பொன்னேரி துணை மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X