பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 11, 2020
Advertisement

போலீசை மிரட்டியவர் கைதுகும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 38. நேற்று முன்தினம் இரவு, பெரவல்லுார் சந்திப்பில், 'குடி'போதையில் சிலரிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது, ரோந்து பணியில் இருந்த கவரைப்பேட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் பாலாஜி, 42, தகராறை தடுக்க முயன்றார்.அவரை, சசிகுமார், கத்தி முனையில் மிரட்டியுள்ளார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், சசிகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மணல் திருடிய மூவர் கைதுஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தையொட்டி, கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த மூன்று டிப்பர் லாரிகளை போலீசார் மடக்கினர்.போலீசை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் துரத்திச் சென்று பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள், தாமரைப்பாக்கம் சவுந்தரராஜன், 34, மணிகண்டன், 36, புன்னபாக்கம் தனசேகர், 34 என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, லாரிகளை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கைது செய்தனர்.சாலை விபத்துகளில் மூவர் பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த, பாபிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் நரசிம்மன் மகன் கோபி,35. இவர், நேற்று காலை, மனைவி பார்வதியுடன், திருத்தணி பஜாருக்கு, டிவிஎஸ் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் சென்றார்.அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, பாபிரெட்டிப்பள்ளி அருகே, ஏரிக்கரையின் மீது செல்லும் போது ஒரு வளைவில், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில், மனைவி பார்வதி கண் முன், கணவன் கோபி, சம்பவ இடத்திலேயே இறந்தார். பார்வதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.* திருத்தணி: வேலுார் மாவட்டம், நந்திவேடுதாங்கல், அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் கோபால் மகன் பிச்சாண்டி, 30. கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், மரம் வெட்டுவதற்காக, ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், திருத்தணி வட்டம், மாம்பாக்கம் - பரவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, ராமகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோர புளி மரத்தின் மீது மோதியதில், பிச்சாண்டி பலத்த காயம் அடைந்தார்.ஆபத்தான நிலையில், '108' ஆம்புன்லஸ் சேவை மூலம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, பிச்சாண்டி இறந்தார். இவ்விரு விபத்துகள் குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

நகரி: ஜார்க்கண்ட் மாநிலம், அஜாரிமாவட்டம், ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் யாதவ், 25. இவர், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் அருகே உள்ள சிகரப்பள்ளி கிராமத்தில், ஜே.சி.பி., மூலம் சாலையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.உணவு இடைவேளையின் போது, வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, ராஜேஷ்குமார் யாதவ் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த கிரேன் வாகனம் மோதியதில், ராஜேஷ்குமார் யாதவ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.காணிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற 6 பேர் கைதுநகரி: சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, ஒ.ஜி.குப்பம் கிராமத்தில், கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சித்துார் மாவட்ட ஏ.எஸ்.பி., கிருஷ்ணா அர்ஜூன்ராவ் உத்தரவின்படி, நகரி காவல் ஆய்வாளர் மத்தைய்யாஆச்சாரி தலைமையில், எட்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட போலீசார் ஒ.ஜி.குப்பத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த, 28 - 70 வயதுள்ள ஆறு பேரை கைது செய்தனர்.மேலும், இவர்களிடம், 12 கிலோ கஞ்சா, 11 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X