பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : பிப் 11, 2020
Advertisement

100 பேருக்கு சிகிச்சைதிருப்போரூர்: திருப்போரூர், எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், தனியார் மருத்துவமனை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது.இதில், மருத்துவர்கள் பங்கேற்று, பொது மருத்துவம், சித்த மருத்தவம், கண் பரிசோதனை, குழந்தை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை, பொதுமக்களுக்கு அளித்தனர்; மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில், 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

புத்தகப்பை வினியோகம்வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டாரத்தில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ - மாணவியருக்கு சீருடை மற்றும், 7,700 மாணவர்களுக்கு, அரசு சார்பில் புத்தகப்பை வழங்கப்படுகிறது.மாணவர்களுக்கு, சீருடை, புத்தகப்பை வழங்குவதற்காக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியையருக்கு, வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நேற்று, அவற்றை வழங்கினார். அவர்கள், அவற்றை எடுத்து சென்று, மாணவர்களுக்கு வழங்கினர்.

15ல் தமிழ் கருத்தரங்கம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகமும், காஞ்சிபுரம் செம்மொழி தமிழ் சங்கமும் இணைந்து, 'தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் நடத்த உள்ளது.அரசு அருங்காட்சியகத்தில், வரும், 15ம் தேதி, காலை, 10:30 மணிக்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இக்கருத்தரங்கில், தமிழ் சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X