பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையை சீர்படுத்த வேண்டும் ; ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : பிப் 11, 2020
Advertisement

ஊத்துக்கோட்டை : 'கோடை காலம் துவங்கும் முன் குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒன்றியக் குழு கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.

பூண்டி ஒன்றியக் குழு கூட்டம், அலுவலக வளாகத்தில், ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணா தலைமையில் நடந்தது. துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், பசுபதி வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.,விஜயகுமார் பங்கேற்றார்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: ஞானமுத்து, தி.மு.க.: ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அடங்கிய பகுதிகளுக்கு, சாலை பணிக்கு, மூன்று லட்சம் ஒதுக்கீடு செய்தது பற்றாக்குறையாக உள்ளது.

இதை அதிகப்படுத்த வேண்டும்.வெங்கட்ரமணா, தலைவர்: முதல் கூட்டம் ஆனதால், நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு உள்ளது. இதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சண்முகம், பா.ஜ.: மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள சாலைகள், சென்றாயன்பாளையம், தோமூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ளது. இதை சீர்படுத்த வேண்டும். விஜயகுமார், எம்.எல்.ஏ.: இதற்கான கமிட்டி வரும்போது, அவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தின் இறுதி யில் பேசிய ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணா, விரைவில் துவங்க உள்ள கோடை காலத்தில் பூண்டி ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னை ஏற்படும். அதை முன்னரே கண்டறிந்து, ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்து, தீர்க்க ஒன்றிய கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X