சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் வாகனத்திற்கு தீ

Added : பிப் 11, 2020
Advertisement

கூவத்துார் : கூவத்துார் அடுத்த, கானத்துாரைச் சேர்ந்தவர், தனசேகர், 45. நேற்று முன்தினம், கொடபட்டினம் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, 'ஹோண்டா ஸ்கூட்டர்' வாகனத்தில் சென்ற இருவர், தனசேகரை வழிமறித்து, பெட்ரோல் பங்க் செல்லும் வழி கேட்டனர்.அவர், 'தெரியாது' என சொல்லவும், ஆத்திரமடைந்த அவர்கள், தனசேகரை ஆபாசமாக திட்டி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது.வாகனத்தில் வந்தவர்கள், ஸ்கூட்டரை விட்டுவிட்டு, தப்பி ஓடினர். சிறிது நேரம் கழித்து வந்தபோது, ஸ்கூட்டர் எரிந்து நிலையில் கிடந்தது.கூவத்துார் போலீசார், இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து, தனசேகர் மற்றும் எதிர் தரப்பு, சென்னை, கொட்டிவாக்கம், சுப்ரமணி மகன், தினேஷ், 22, கங்கன் மகன் சூர்யா, 19, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X