பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : பிப் 11, 2020
Share
Advertisement

பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, கல்வி பயில்கின்றனர்.இவர்களுக்கு, போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர்.தனியார் தொழிலதிபர்கள் பங்களிப்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டி கொடுக்கப்பட்டது.

இதன் துவக்க விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.துர்்கைக்கு ராகுகால பூஜைஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது துர்க்கை சன்னிதி. நேற்று, மாலை, 3:00 -மணி முதல், 4:30 மணிக்குள் ராகு கால பூஜை நடந்தது.அம்மனுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.இதேபோல், ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கும், ராகு கால பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதை தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் உட்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

இதே போல், திருத்தணியில், தணிகாசலம்மன், பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், படவேட்டம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.பிளாஸ்டிக் கவர் பறிமுதல்திருத்தணி: திருத்தணி நகராட்சியில், பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாக, நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஆணையர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில், துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று, மேற்கண்ட பகுதியில் கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, கடைகளில் பயன்பாட்டில் இருந்த, 75 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும், சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X