பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி வளர்ச்சி பணி: நாளை ஆலோசனை கூட்டம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி பெற வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் தலைமையில், நாளை, மாலை, 4:30 மணிக்கு, நெல்லுக்காரத்தெருவில் உள்ள எம்.எம்., ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, புதிய பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்துவது குறித்து பேசப்படுகிறது.மேலும், குடிநீர் வழங்கல் திட்டங்களை மேம்படுத்தப்பட்ட புதிய திட்டத்தை பெறுவது, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது, அரசு மருத்துவக்கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்கள் தொடர்ந்து பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.இதில், காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட அரசியல் கட்சியினர், இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?காஞ்சிபுரம் நகரில் ஏற்படும் கடும் வாகன நெரிசலுக்கு, நகரின் மத்தியில் உள்ள பஸ் நிலையம் முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக, புறநகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது.ஆனால், புதிய பஸ் நிலையம், காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில், 11.7 ஏக்கர் நிலத்தில் அமைய இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு, பஸ் நிலையம் அமைக்க, அப்பகுதியில் விவசாயம் பார்த்து வரும் விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும், நிலங்களை கையப்படுத்தும் பணியில், மாவட்ட நிர்வாகம், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு, 1971 முதல் விண்ணப்பம் அளித்தும், வருமான வரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் குமுறுகின்றனர். ஆதலால், புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம், இந்த கூட்டத்தில், முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X