பொது செய்தி

தமிழ்நாடு

'கிசான்' கடன் அட்டை திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

திருவள்ளூர் : விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை பெற்று பயன் பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கிசான் கடன் அட்டை திட்டம், அனைத்து வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் செயல்பட்டு வருகிறது.இந்த அட்டை மூலம், கடன் பெறும் விவசாயிகளுக்கு, 7 சதவீதம் வட்டி விகிதத்தில், பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.இக்கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசால், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு, 70 வயது வரை தனி நபர் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள் இதுவரை எந்த வங்கியிலும், விவசாயக் கடன் அட்டை பெறவில்லை எனில், அவர்கள், ஏற்கனவே வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர்களை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கிசான் கடன் அட்டையினைப் பெற்று பயன் பெறலாம்.

கிசான் கடன் அட்டைதாரர்கள், கால்நடை மற்றும் மீனவருக்காக மீன்பிடி பராமரிப்பு செலவுக்கான கடன் பெறுவதற்கு வங்கிக் கிளையை அணுகலாம்.அனைத்துத் தரப்பு விவசாயிகளும், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X