சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியில் இருந்து குதித்து ஐ.டி., நிறுவன பெண் பலி

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்போரூர் நாவலுாரில், ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து, ஐ.டி., நிறுவன பெண் ஊழியர், நேற்று இறந்தார்.

சேலத்தைச் சேர்ந்த அப்பாதுரை மகள் ஊர்மிளா, 25; திருப்போரூர் ஒன்றியம், நாவலுாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில், எட்டு மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல், 12:00 மணிக்கு, அலுவலகத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து, அதே இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார், சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து, பெண்ணின் இறப்பு தற்கொலையா, கொலையா என, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X