பழவேற்காடில் படகு கவிழ்ந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழவேற்காடில் படகு கவிழ்ந்தது

Added : பிப் 11, 2020
Share

பழவேற்காடு : பழவேற்காடு, சாட்டன்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த, கோபி, 28, பிரதாப், 25, பாஸ்கர், 38, சிவராஜ், 32, ஆகியோர் நேற்று, மாலை, 5:00 மணிக்கு, கடலில் மீன்பிடிக்க பைபர் படகில் சென்றனர்.முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும்போது, கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.

இதில் படகில் சென்ற, நான்கு மீனவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.அதே சமயம் மீன்பிடிக்க அவ்வழியாக வந்த சக மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். இந்த விபத்தில் படகின் என்ஜின் சேதம் அடைந்தது.கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீனவர்கள் சென்ற படகு விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடல் சீற்றத்தின் அச்சம் காரணமாக, 100க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து கரை திரும்பின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X