சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பத்தில் கார் மோதி விபத்து

Added : பிப் 11, 2020
Advertisement

பழவேற்காடு, : பழவேற்காடு மீனவ பகுதிக்கு, மெதுார் துணை மின் நிலையத்தில் இருந்து, மின் கம்பங்கள் வழியாக 11 கிலோவாட் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த மின் கம்பங்கள் பொன்னேரி- - பழவேற்காடு சாலையோரம் பதிக்கப்பட்டு உள்ளன.நேற்று மாலை, பழவேற்காட்டில் இருந்து, பொன்னேரி நோக்கி சென்ற போர்டு கார் ஒன்று, பழவேற்காடு, 2வது பாலத்தின் அருகே செல்லும்போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.இதில், மின் கம்பம் உடைந்து, மின்ஒயர்கள் அறுந்தன. இதனால், பழவேற்காடு பகுதிக்கு செல்லும் மின் வினியோகம் தடைபட்டது.

மெதுார் துணை மின்நிலைய ஊழியர்கள் சென்று மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை மீனவ கிராமங்களில் மின்சாரம் இல்லாததால், மீனவ மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X