சாலையில் விழுந்து கிடக்கும் பள்ளி சுவரால் சிரமம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் விழுந்து கிடக்கும் பள்ளி சுவரால் சிரமம்

Added : பிப் 11, 2020
Share

பொன்னேரி : ரயில் நிலையம் செல்லும் சாலையில், அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் விழுந்துக் கிடப்பதால், பயணியர் மற்றும் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பொன்னேரி அடுத்த, வேண்பாக்கம் மின்வாரியம் அலுவலகம் அருகில் இருந்து, ரயில் நிலையம் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை, அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தினை ஒட்டி செல்கிறது.

சில தினங்களுக்கு முன், பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து, மேற்கண்ட சாலை யோரத்தில் விழுந்தது.இது அவ்வழியாக சென்று வரும், ரயில் பயணியர் மற்றும், வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.இரவு நேரங்களில், அவ்வழியாக, ரயில் நிலையத்தில் இருந்து நடந்து வரும் பயணியர், சாலையில் கிடக்கும் இடிபாடுகளில் இடறி விழுந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். ரயில் பயணியர் மற்றும் குடியிருப்புவாசிகள் சென்றுவரும் வேண்பாக்கம் பள்ளம் சாலையில் உள்ள கட்டட இடிபாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X