பொது செய்தி

தமிழ்நாடு

அவசியம்! கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி பராமரிப்பு....கோடை காலம் துவங்க உள்ளதால் எதிர்பார்ப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

உத்திரமேரூர் : கோடை காலம் துவங்க உள்ள நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகளிலும், கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக கட்டப்பட்ட, கால்நடை தொட்டியில், தினமும் தண்ணீர் நிரப்பி, முறையாக பராமரிக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போவதால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தண்ணீர் கிடைக்காமல், தாகத்தால் தவிக்கின்றன. வாயில்லா ஜீவன்களின் தாகத்தை தணிப்பதற்காக, தமிழக அரசு, 2018ம் ஆண்டு, கிராம ஊராட்சிகளில், கால்நடைகளுக்கு என, தனியாக குடிநீர் தொட்டி கட்டி, அதில் குடிநீரை நிரப்ப, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை உத்தரவிட்டது.

நிதி ஒதுக்கீடுஅதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள, 73 ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 20 ஆயிரம் ரூபாய் செலவில், தலா ஒரு குடிநீர் தொட்டி கட்டவும், பெரிய ஊராட்சிகளில் இரு இடங்களில் தொட்டி கட்டவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில், ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே, கால்நடை தொட்டி கட்டப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறது.

பெரும்பாலான ஊராட்சிகளில், குடிநீர் வசதி மற்றும் கால்நடைகள் வந்து செல்லும் இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும், தொட்டியில் தினமும், தண்ணீர் நிரப்பி முறையாக பராமரிப்பதில்லை. அதேபோல், கால்நடைகள் செல்ல வழி இல்லாத இடத்தில் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. தண்ணீர் வசதி இல்லாத இடத்திலும், தரமற்ற கட்டுமான பணியால், தொட்டியில் தண்ணீர் தேங்காமல், உடனே வெளியேறி விடுகிறது. நடவடிக்கைசில இடங்களில் கட்டுமான பணி. துவக்கப்படாமல் உள்ளது. இதனால், அரசு நிதி வீணாவதோடு, திட்டத்தின் நோக்கமே செயல்படாமல் முடங்கும் நிலை உள்ளது.

தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை குடிநீர் தொட்டியை, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள தொட்டிகளில் ஆய்வு செய்து, குடிநீர் நிரப்ப வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஊராட்சி செயலர் கவனிப்பர்உத்திரமேரூர் வட்டாரத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை குடிநீர் தொட்டிகளில், தண்ணீர் நிரப்பி முறையாக பராமரிக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இருப்பினும், கோடைக்காலம் துவங்க உள்ளதால், உத்திரமேரூர் ஒன்றியம் முழுவதும் ஆய்வு செய்து, கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். வட்டார வளர்ச்சி அலுவலர்உத்திரமேரூர் ஒன்றியம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X