சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உக்ரைனில் தவித்த மாணவர்கள் கல்வி நிறுவனம் மீது புகார்

Added : பிப் 11, 2020
Advertisement

மதுரை : உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிக்க மாணவர்களை அனுப்பிய மதுரை நிறுவனம், அங்கீகாரம் இல்லாத கல்லுாரியில் சேர்த்து, விசாவையும் ரத்து செய்தது. இதனால், இந்திய வெளியுறவு துறையை நாடிய மாணவர்கள், அபராதம் செலுத்தி, ஊர் திரும்பினர்.


மருத்துவ படிப்பு

மதுரை மாவட்டம், மேலுாரைச் சேர்ந்தவர், சீனிவாசன், 53. இவரது மகன் செந்தமிழ் தாசன். இவரை, காளவாசலில் உள்ள, 'நெஸ்ட் அப்ராட் ஸ்டடீஸ் அகாடமி' நிறுவனம் மூலம், உக்ரைனில் மருத்துவம் படிக்க அனுப்பினார்.இதற்காக, 2.55 லட்சம் ரூபாய் கொடுத்தார். இந்நிறுவனம், இந்தியாவின் மெடிக்கல் கவுன்சில் அங்கீகாரம் இல்லாத கல்லுாரியில், செந்தமிழ்தாசனை சேர்த்தது.இது குறித்து, சீனிவாசன் கேட்டபோது, அடுத்த ஆண்டில் சேர்ப்பதாக கூறி, மூன்று ஆண்டுகளாக ஏமாற்றியது.
இதற்கிடையே, கல்லுாரி படிப்பு செலவுக்காக, மொத்தம், 21.49 லட்சம் ரூபாயை, சீனிவாசன் செலவழித்த நிலையில், அங்கீகாரம் உடைய கல்லுாரியில் சேர்க்க, 'நெஸ்ட் அப்ராட்' நிறுவனத்திற்கு கூடுதலாக, 1 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதன்பிறகும் சேர்க்கவில்லை. இதேபோல், உக்ரைனில் செந்தமிழ்தாசனுடன் தங்கியிருந்த மாணவர்கள் விக்னேஷ், இந்திரஜித் ஆகியோரும், அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டனர்.


விசா ரத்து


பெற்றோர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதால், மாணவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கி, விசாவையும், 'நெஸ்ட் அப்ராட்' நிறுவனம் ரத்து செய்தது.இதையடுத்து, இந்திய வெளியறவு துறையை அணுகி, அபராதம் செலுத்தி, மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.இது தொடர்பாக, சீனிவாசன் புகாரின்படி, அந்நிறுவனத்தின் நிர்வாகி பாரதிமோகன் மற்றும் ராமநாதபுரம் திருலோகசுந்தர், உடுமலைபேட்டை ஹரிசுதன், திண்டுக்கல் ராகுல்நாத் ஆகியோர் மீது, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X