சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 கார், 70 இருசக்கர வாகனங்களை விற்ற போலீசார்

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருச்சி : திருச்சி அருகே, வாகன சோதனையில் பிடிபட்ட, 70 இருசக்கர வாகனங்கள், இரண்டு கார்களை, 1.50 லட்சம் ரூபாய்க்கு, போலீசார் விற்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில், திருட்டு, மதுபானம் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில், ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவை, காவல் நிலையத்தின்
 2 கார், 70 இருசக்கர வாகனங்களை விற்ற போலீசார்

திருச்சி : திருச்சி அருகே, வாகன சோதனையில் பிடிபட்ட, 70 இருசக்கர வாகனங்கள், இரண்டு கார்களை, 1.50 லட்சம் ரூபாய்க்கு, போலீசார் விற்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில், திருட்டு, மதுபானம் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில், ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவை, காவல் நிலையத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் போலீசார், 70 இருசக்கர வாகனங்கள், 'மாருதி ஸ்விப்ட்' உட்பட, இரு கார்களையும், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், தனியாருக்கு விற்று உள்ளனர்.

அதுவும், 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே, அவற்றை விற்றுள்ளதால், போலீசார் ஊழலில் ஈடுபட்டுள்ளனரோ என, மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்து, போலீசார் கூறியதாவது:போலீசாரால் பிடிபட்ட வாகனங்கள் அனைத்தும், முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏலம் விடப்படும்.ஆனால், இங்கு நீண்ட காலமாக கேட்பாரற்று கிடந்த, 70 இருசக்கர வாகனங்கள், இரு கார்களையும், 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்றுள்ளனர்.

அவற்றின் மதிப்பு, 15 லட்சத்துக்கு மேல் இருக்கும்.இதில், மோசடி நடந்துள்ளது. இவ்விஷயத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு, தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202007:45:17 IST Report Abuse
Bhaskaran மறைமலை நகர் காவல் நிலையத்தில் இதுபோல் pala நூறு வண்டிகள் கிடந்தன. ஒரேநாள் இரவில் விற்கப்பட்டதாக சொன்னார்கள் பல வண்டிகள் மிகவும் நல்ல நிலையில் இருந்தன
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எதுவும் புதிதல்ல பாகப் பிரிவினை நடைமுறைகளை பின்பற்றுவதில் சின்ன உரசலால் வந்த வினையாயிருக்கலாம்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-பிப்-202000:29:34 IST Report Abuse
தமிழவேல் திருடனுவோ எங்கேயும் இருப்பானுவோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X