பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை தொட்டியில் வீணாகும் குடிநீர்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, இந்திராபுரம் கிராமத்தில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இவர்களின் குடிநீர் தேவைக்காக, 2 கி.மீ., உள்ள நெல்லி கிராமத்தில், திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.அங்கிருந்து, குழாய் வழியாக, இந்திராபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி, குடிநீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில், இந்திராபுரம் நீர்த்தேக்க தொட்டியில், முழுமையாக நிரம்பியதும், தண்ணீர் வீணாக வழிகிறது. மின் மோட்டாரை முறையாக இயக்காததால், தினந்தோறும், குடிநீர் வீணாகிறது.வீணாகும் தண்ணீர், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி தேங்கி, சேறும், சகதியுமாகிறது.

கோடைக்காலம் நெருங்கும் நிலையில், குடிநீர் இப்படி வீணாக்கப்படுவதால், விரைவில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்.ஆகவே, மின் மோட்டாரை சரியாக இயக்கி, தண்ணீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X