பயங்கரவாதியிடம் போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதியிடம் போலீசார் விசாரணை

Added : பிப் 11, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினத்தில் கைதான பயங்கரவாதியை, போலீஸ் காவலில் விசாரித்தனர். ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் பகுதியில், ஜன., 22ல் பிச்சைக்கனி, அமீர், முகமது அலி, ஆகிய மூன்று பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் இருந்த, தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த சேக்தாவூத் தப்பிச் சென்றார். அவரை, பிப்., 1ல் போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினத்தில் கைதான பயங்கரவாதியை, போலீஸ் காவலில் விசாரித்தனர்.

ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் பகுதியில், ஜன., 22ல் பிச்சைக்கனி, அமீர், முகமது அலி, ஆகிய மூன்று பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் இருந்த, தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த சேக்தாவூத் தப்பிச் சென்றார். அவரை, பிப்., 1ல் போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதால், அவரை போலீஸ் காவலில் விசாரிக்க, ராமநாதபுரம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர்.

இதையடுத்து, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட் உத்தரவிட்டது. சேக்தாவூதை ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்து, டி.எஸ்.பி., வெள்ளதுரை விசாரித்தார். வேறு எதுவும் தகவல்கள் கிடைக்காததால் நேற்று மாலை, சேக்தாவூதை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X