அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் அகற்றப்படாத கட்சி கொடி கம்பங்கள்

Added : பிப் 11, 2020
Advertisement

காஞ்சிபுரம் : நீதிமன்றம் உத்தரவிட்டும், காஞ்சிபுரம் நகர் பகுதியில், அரசியல் கட்சியின் கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அகற்றப்படாமலேயே உள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அரசியல் கட்சிகளின் கல்வெட்டுகள் மற்றும் கொடி கம்பங்களை அகற்ற, சில மாதங்களுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், காஞ்சிபுரம் நகராட்சியில், அரசியல் கட்சியின் கொடி கம்பங்கள், சில இடங்களில் மட்டும், கடமைக்காக அகற்றப்பட்டன.

முக்கிய இடங்களில், கொடி கம்பங்களும், கல்வெட்டுகளும் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன.நீதிமன்றம் உத்தரவிட்டும், காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் கொடி கம்பங்கள் அகற்றாமல், நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X