போலீஸ் கொள்ளையர் 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போலீஸ்' கொள்ளையர் 4 பேர் கைது

Added : பிப் 11, 2020
Share
கோவை : போலீஸ் போல் நடித்து, 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 650 கிராம் நகைகளை கொள்ளை அடித்த, வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சின்னையா, 55; நகை வியாபாரி. கோவை செல்வபுரம் தங்க பட்டறையில், 650 கிராம் தங்க கட்டியை, நகைகள் செய்து தரக் கோரி, 'ஆர்டர்' கொடுத்தார்.டிச., 17ல், கோவைக்கு வந்த அவர், ஆர்டர் கொடுத்த, 24 லட்சம் ரூபாய்

கோவை : போலீஸ் போல் நடித்து, 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 650 கிராம் நகைகளை கொள்ளை அடித்த, வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சின்னையா, 55; நகை வியாபாரி. கோவை செல்வபுரம் தங்க பட்டறையில், 650 கிராம் தங்க கட்டியை, நகைகள் செய்து தரக் கோரி, 'ஆர்டர்' கொடுத்தார்.டிச., 17ல், கோவைக்கு வந்த அவர், ஆர்டர் கொடுத்த, 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கி, ஆட்டோவில் வந்தார்.உக்கடம் வரும் வழியில், ஆட்டோவை, நான்கு பேர் வழிமறித்தனர். போலீஸ் எனக் கூறி ஏமாற்றி, அவர் வைத்திருந்த நகையை பறித்து தப்பினர்.கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில், போலீஸ் போல நடித்து, நகை திருடியதாக, வட மாநிலங்களைச் சேர்ந்த, அபுஹைதர் அலி, 45, மெகந்தி அலி, 45, சாதிக் அலி, 35, ஹசன்அலி, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவையில் போலீஸ் போல நடித்து, நகை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, பெரிய கடை வீதி போலீசார், சென்னை சென்று, நான்கு பேரையும் கைது செய்து, நேற்று கோவைக்கு அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X