அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகிகள் சரமாரி புகார்: ஓபிஎஸ் - இபிஎஸ் கடும் அதிர்ச்சி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ADMK,OPS,EPS,அதிமுக,ஓபிஎஸ்,இபிஎஸ்

அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஒருவர் மீது ஒருவர், சரமாரி புகார்களை கூறியது, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி வளர்ச்சி பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை, அ.தி.மு.க., தலைமை நடத்தி வருகிறது. ஆலோசனைநேற்று காலை, திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில், கன்னியாகுமரி, கடலுார், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடனும், ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஏப்ரல் இறுதியில் நடக்க உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும்படி, அறிவுரை வழங்கினர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தோல்வி அடைந்த பகுதியினரிடம், காரணங்களை கேட்டனர். அப்போது, மாவட்ட நிர்வாகிகள், ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியது, இருவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாவட்டத்தில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது.இரு அமைச்சர்கள் இருந்தும், கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லையா என, முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களிடம் கடிந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கட்சி நிர்வாகிகள், அமைச்சர் வளர்மதி மீது, சரமாரியாக புகார்களை தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், 'நீங்கள் கூறும் விஷயங்கள், எங்களுக்கு தெரியும். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். நீங்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம்' எனக்கூறி, அமைதிப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று நடந்த, நீலகிரி மாவட்ட கூட்டத்தில் பங்கேற்க, 58 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது; எட்டு பேர் மட்டுமே வந்தனர். மற்றவர்கள் வராததற்கான காரணம் தெரியவில்லை. நிர்வாகிகள் எண்ணிக்கை குறைவு என்பதால், நீலகிரி மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை, இணைத்து நடத்தினர்.


கோஷமிட்டனர்


திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கூட்டத்தில், மாவட்ட செயலரான, எம்.எல்.ஏ., மோகன் மீது, கட்சியினர் சரமாரி புகார் தெரிவித்தனர். 'ஊரக உள்ளாட்சி தேர்தலில், பணம் பெற்று, 'சீட்' வழங்கினார். எனவே, அவரை மாற்ற வேண்டும்' என்றனர். கூட்டம் முடிந்து கீழே வந்த நிர்வாகிகள், மாவட்ட செயலருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.




ஒத்திவைப்பு!


இன்று காலை, 10:00 மணிக்கு, தேனி, அரியலுார், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள்; மாலை, 4:00 மணிக்கு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த மாவட்டங்களுக்கான கூட்டம், வரும், 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை மறுதினம் வரை, கூட்டம் கிடையாது. வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஆலோசனை கூட்டம் நடக்கும்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-பிப்-202013:18:59 IST Report Abuse
Sampath Kumar ஒருத்தனே கொள்ளை அடிக்க கூடாது கட்சியில் எல்லார்க்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பு கொடுக்கணும் இல்லா விட்டால் உள்குத்து வெளிக்குத்து எல்லாம் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-பிப்-202011:39:16 IST Report Abuse
RajanRajan ஓ அப்போ கட்சிக்குள்ளேயே கம்பு சுத்த துவங்கிட்டங்களாகும். நல்ல சுத்துங்கப்பா. ஒன்னு எங்களை ஊழல் பண்ண வுடு அல்லாட்டி நீங்க ஊழல் பண்ணி பங்களிப்பு கொடுங்க. ஒருத்தர் மட்டும் எப்படி தொடர்ந்து காசு பார்த்து கொண்டிருப்பதை நாங்க சகிச்சுக்க முடியுமா என்ன.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-பிப்-202011:27:42 IST Report Abuse
நக்கீரன் அழியப்போகிற கட்சி... இனி எப்படியிருந்தால் என்ன... போங்க, போய் வேலையைப்பாருங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X