அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் 10 பேரின் படங்கள் வெளியீடு

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் 10 பேரின் படங்கள் வெளியீடு

சென்னை : 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்களுக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியதாக தேடப்பட்டு வந்த, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் புகைப்படத்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்டுள்ளனர்.

'நீட்' தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, வேறு சிலரை தேர்வு எழுத வைத்த முறைகேடு நடந்தது. இது தொடர்பாக, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை, டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட, 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து, 'நீட்' தேர்வு எழுதிய, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் படத்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வெளியிட்டனர்.

இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், 94438 84395 என்ற மொபைல் போன் எண்ணிற்கும், Dspccwcbcid@tn.gov.in என்ற, இ - மெயில் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என, அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-பிப்-202012:56:58 IST Report Abuse
Bhaskaran இவனுங்க கையில் அதிகாரம் இருக்கு நினைத்தால் ஒரு நாளில் பிடிக்கலாம் .இதெல்லாம் போங்கு வேலைகள்
Rate this:
Cancel
13-பிப்-202015:04:12 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை நீட்டுக்கு ஆதார் கட்டாயமில்லைன்னு சொன்ன நீதிபதிங்க மூஞ்சிய எங்கன வெச்சுக்குவாங்க
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
13-பிப்-202014:40:17 IST Report Abuse
dandy கட்டுமரம் 5 தடவை ஆண்ட நாடு அல்லவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X