'ஹாட்ரிக்' முதல்வர் கெஜ்ரிவால்!

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (2+ 353)
Advertisement
ArvindKejriwal,AamAadmiParty,Kejriwal,DelhiPolls2020,DelhiElectionResults,AAPWinningDelhi,டில்லிதேர்தல்,காங்கிரஸ்,கெஜ்ரிவால்,ஆம்ஆத்மி,ராகுல்,ராகுல்காந்தி

ஹரியானாவில் 1968 ஆக., 16ல் கெஜ்ரிவால் பிறந்தார். காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, 'டாடா ஸ்டீல்' நிறுவனத்தில் சேர்ந்தார். ஐ.ஆர்.எஸ்., தேர்வில் வென்று 1995ல் வருமான வரித்துறையில் சேர்ந்தார். 'வருமான வரி இணை கமிஷனராக' இருந்த இவர், 2006ல் விலகினார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், அரசு நிறுவன முறைகேடுகளை வெளிகொண்டு வந்தார். மக்கள் விரும்பினால் எம்.எல்.ஏ.,/எம்.பி.,க்களை திரும்ப பெறும் வசதியை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். 2011ல் அன்னா ஹசாரே தொடங்கிய 'ஊழலுக்கு எதிரான இயக்கத்தில்' சேர்ந்து, ஜன் லோக்பால் மசோதா கொண்டு வர போராட்டம் நடத்தினார். 2012 நவ., 26ல் 'ஆம் ஆத்மி' கட்சியை துவக்கினார்.

டில்லியில் 2013 டிச., 4ல் சந்தித்த முதல் தேர்தலில் 28 இடங்களில் வென்று, நாட்டு மக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். தேர்தலுக்கு முன் காங்., ஆட்சியின் ஊழலை எதிர்த்து போராடிய இவர், காங்., ஆதரவுடன் 2013 டிச., 28ல் முதல்வரானார். இவரது லோக்பால் மசோதாவுக்கு காங்., ஆதரவு அளிக்காததால், 49 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.





2015 பிப்., 7ல் நடந்த தேர்தலில், 67 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தார். 2015 பிப்., 14ல் இரண்டாவது முறை முதல்வரானார். 'மொஹல்லா' எனும் சமுதாய ஆரம்ப சுகாதார மையத்தை தொடங்கினார். இத்திட்டம் பலராலும் பாரட்டு பெற்றது. 2018 ன் படி 450 மையங்கள் உள்ளன. 20 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். 2020க்குள் 1000 மையங்கள் அமைக்க கெஜ்ரிவால் இலக்கு நிர்ணயித்துள்ளார். 2020 தேர்தலில் 63 தொகுதிகளில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 'ஸ்வராஜ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 'ராமன் மகசாசே' உட்பட சில விருதுகளை பெற்றுள்ளார்.


காங்., 'சரண்டர்' ஏன்?


டில்லியில் 1993-2013 வரை காங்., கை மேலோங்கியிருந்தது. 15 ஆண்டுகளுக்கு(1998-2013) ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். 2013ல் ஆம் ஆத்மி வரவு, காங்., பாரம்பரிய ஓட்டு வங்கிக்கு வேட்டு வைத்தது. காங்., ஆதரவு அளித்த தலித், நகரங்களில் வசிக்கும் வசதி இல்லாதவர்கள் ஆம் ஆத்மி பக்கம் திரும்பினர். 2008 சட்டசபை தேர்தலில் 40 சதவீதமாக இருந்த காங்., ஓட்டு சதவீதம், 2015ல் 9.7 ஆக குறைய, ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த முறை 4.2 சதவீத ஓட்டுகளுடன் மீண்டும் பூஜ்யம் பெற்றுள்ளது. 2019ல் ஷீலா தீட்சித் மறைவுக்கு பின், டில்லியில் வலுவான தலைவர் உருவாகததும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.


பா.ஜ., தப்புக்கணக்கு:


கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ., முழுமையாக கைப்பற்றியது. 56.6 சதவீத ஓட்டுகளை பெற்றது. அடுத்த இடத்தை காங்.,(22.5 சதவீதம்), மூன்றாவது இடத்தை ஆம் ஆத்மி (18 சதவீதம்) பெற்றன. லோக்சபா தேர்தல் ஓட்டு சதவீத அடிப்படையில் பார்த்தால், இம்முறை சட்டசபை தேர்தலில் குறைந்தது 65 இடங்களில் பா.ஜ., வென்றிருக்க வேண்டும். ஆனால் 8 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இது, தேசிய, உள்ளூர் அரசியலை மக்கள் வெவ்வேறாக பார்க்கின்றனர் என்பதை உணர்த்தியது. சட்டசபை தேர்தலில் உள்ளூர் விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

* முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியை முன் நிறுத்தியே பிரசாரம் செய்ததும் பின்னடைவுக்கு காரணம். டில்லியில் சந்தித்த சரிவு, அடுத்து வரும் பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாருடன் கூட்டணி 'சீட்' பேரத்தில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி ஏற்படுத்தும்.






வென்ற தலைவர்கள்... உருண்ட தலைகள்



வெற்றி:


* கெஜ்ரிவால், முதல்வர், ஆம் ஆத்மி - புதுடில்லி
* மணிஷ் சிசோடியா, துணை முதல்வர் , ஆம் ஆத்மி - பாட்பர்கஞ்ச்
* சோம்நாத் பாரதி, முன்னாள் அமைச்சர் , ஆம் ஆத்மி - மால்வியா நகர்
* விஜேந்திர குப்தா, எம்.எல்.ஏ. , பா.ஜ., - ரோஹிணி
* ஓம் பிரகாஷ் சர்மா, எம்.எல்.ஏ., பா.ஜ., - விஸ்வாஸ் நகர்


தோல்வி:


* கபில் மிஸ்ரா (ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர்) , பா.ஜ., - மிடில் டவுன்
* தஜிந்தர் பால் சிங், செய்தி தொடர்பாளர், பா.ஜ., - ஹரி நகர்
* அசோக்குமார் வாலியா, முன்னாள் அமைச்சர், காங்., - கிருஷ்ணா நகர்
* ஆல்கா லம்பா (ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.,), காங்., - சாந்தினி சவுக்
* அரவிந்தர் சிங் லவ்லி, முன்னாள் அமைச்சர், காங்., - காந்தி நகர்


டில்லி சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்



புராரி தொகுதி:


சஞ்சீவ் ஷா, ஆம் ஆத்மி - 1,39,598
சைலேந்திர குமார், ஐ.ஜ.த., - 51,440
வித்தியாசம் - 88,158


குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்:



பிஜ்வாசன் தொகுதி


புபிந்தர் சிங், ஆம் ஆத்மி - 57,271
சத் பிரகாஷ் ராணா, பா.ஜ., - 56,518
வித்தியாசம் - 753


17 தேர்தல்களில் பா.ஜ., எப்படி?


கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 மாநில சட்டசபை தேர்தல்களில் 8ல் பா.ஜ., வெற்றி பெற்றது.


2020


* டில்லி, தோல்வி


2019


* அருணாச்சல், வெற்றி
* சிக்கிம், வெற்றி, கூட்டணி ஆட்சி
* ஹரியானா, வெற்றி, கூட்டணி ஆட்சி
* ஆந்திரா, தோல்வி
* ஒடிசா, தோல்வி
* மஹாராஷ்டிரா, தோல்வி
* ஜார்க்கண்ட், தோல்வி


2018


* திரிபுரா, வெற்றி
* கர்நாடகா, வெற்றி
* நாகாலாந்து, வெற்றி, கூட்டணி ஆட்சி
* மேகாலயா, வெற்றி, கூட்டணி ஆட்சி
* மிசோராம், வெற்றி, கூட்டணி ஆட்சி
* சத்தீஸ்கர், தோல்வி
* மத்திய பிரதேசம், தோல்வி
* ராஜஸ்தான், தோல்வி
* தெலுங்கானா, தோல்வி

Advertisement




வாசகர் கருத்து (2+ 353)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-பிப்-202016:46:24 IST Report Abuse
Endrum Indian "தேர்தலுக்கு முன் காங்., ஆட்சியின் ஊழலை எதிர்த்து போராடிய இவர், காங்., ஆதரவுடன் 2013 டிச., 28ல் முதல்வரானார்" வெளங்கிடும் இந்த மாதிரி மனநிலையில் உள்ளவர்களால் டில்லி ???
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202013:36:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஹாட்ரிக் என்று சொல்வது தவறு. முதல்முறை பெரும்பான்மை கிடைக்கவில்லை , காங்கிரஸ் தயவோடு ஆட்சி அமைத்து குறுகிய காலத்தில் கலைந்துவிட்டது. இது இரண்டாவது முறைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X