அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆம் ஆத்மி வெற்றி: உற்சாகத்தில் ஸ்டாலின்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (34)
Advertisement
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்,DelhiPolls2020,DelhiElectionResults,AAPWinningDelhi, டில்லிதேர்தல்

டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உற்சாகம் அடைந்துள்ளார். ஆம் ஆத்மி வெற்றிக்கு வியூகம் வகுந்து தந்த, பிரசாந்த் கிஷோர், தி.மு.க.,வுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து தர உள்ளது தான், இதற்கு காரணம்.

டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தேர்தல் வியூகங்களை, பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்தார். 'மத்திய அரசின், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் குறித்து, பிரசாரத்தில் எந்த எதிர்ப்பும் வேண்டாம். மக்களுக்கான திட்டங்களையும், அரசின் சாதனைகளையும் மட்டுமே பேசுங்கள். ஹிந்து கோவிலுக்கு செல்லுங்கள்; அனுமார் பாடல் பாடுங்கள்' என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகங்களை, அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுத்தியதால், அவரது கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால், பிரசாந்த் கிஷோருக்கும் பாராட்டு கிடைத்துள்ளது.

பிரசாந்த் கிஷோர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'இந்தியாவின் ஆன்மா பாதுகாக்கப்பட்டுள்ளது' என, கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'டுவிட்டர்' பக்கத்தில், 'அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள். வளர்ச்சி தான், வகுப்பு வாதத்தை வீழ்த்தும் என்பதற்கான தெளிவான நிரூபணம் இது. நாட்டின் ஒற்றுமைக்காக, நாம் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்களை வலுப்படுத்த வேண்டும்' என, கூறியுள்ளார்.

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, டுவிட்டர் பக்கத்தில், 'டில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமோக வெற்றி கிடைத்ததற்கு, என் வாழ்த்துகள்' என, கூறியுள்ளார்.

தமிழகத்தில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக, பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளார். இந்த நேரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதால், ஸ்டாலின் உற்சாகம் அடைந்துள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
13-பிப்-202012:25:32 IST Report Abuse
Gopi ஆரியன் வடநாட்டான் பிராமண பிசாசு என்று இப்பொழுது ஸ்டாலின் மற்றும் அவர்களின் படைகள் எதுவும் வாய்திறக்காது
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
13-பிப்-202004:02:00 IST Report Abuse
oce இரண்டு கோடி கை நாட்டு காகித மூட்டைகளை எப்படி தபால்காரன் தூக்கி போவான். அதான் கடையில் எடைக்கு போட்டிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
13-பிப்-202001:29:41 IST Report Abuse
Oru Indiyan ஆம் ஆத்மீ ஒரு ஹிந்தி வார்த்தை பிரஷாந்த் கிஷோர் வட இந்தியன் ஹிந்தி எதிர்ப்பாளர்கள் , வட இந்தியாவை எதிர்ப்பவர்களக்கு ஏன் இந்த புதிய காதல்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X