தமிழ்நாடு

படிக்கலாம் வாங்க: 1,627 மாணவ, மாணவியருக்கு வாகனம் ஏற்பாடு செய்து சிறப்பு

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 11, 2020
Advertisement
படிக்கலாம் வாங்க: 1,627 மாணவ, மாணவியருக்கு வாகனம் ஏற்பாடு செய்து சிறப்பு

கோவை:கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் காவலர் வசதி செய்வதற்கு, 1,627 மாணவ, மாணவியர் தகுதி பெற்றுள்ளனர்.பஸ் போக்குவரத்து வசதியில்லாத, மலை கிராமங்களில், பள்ளி மாணவ, மாணவியர் இடைநிற்றல் அதிகமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு, கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் காவலர் வசதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் தொலைதுார 1,193 குடியிருப்புகளில் வசிக்கும் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.இதில், 1,069 குடியிருப்புகள், மலைப்பகுதிகளில், தொலைதுார கிராமப்பகுதிகளில் அமைந்திருப்பவை. 124 குடியிருப்புகள், நகர்ப்புறத்தில் அமைந்திருப்பவை. இந்த குடியிருப்புகளை ஒட்டி, பள்ளிகள் எதுவும் இல்லை.

எனவே, அந்த குடியிருப்புகளை சேர்ந்த குழந்தைகளை, ஆட்டோ, ஜீப், வேன் மூலம் அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும், பள்ளி நேரம் முடிந்தவுடன் மீண்டும் குடியிருப்பில் கொண்டு சென்று விட வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென காவலர்களை ஏற்பாடு செய்யவும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில், 118 குடியிருப்புகளை சேர்ந்த, 1627 பள்ளிக்குழந்தைகள் வரும் கல்வியாண்டு முதல் பயன் பெறுவர். இம்மாணவர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளிகளில் தற்போது பயின்று வருகின்றனர்.இத்திட்டத்தால் ஏராளமான மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.


எத்தனை பேருக்கு பயன்?

இந்த திட்டத்தால் அதிகபட்சமாக, காரமடை வட்டா ரத்தில் 460 மாணவர்கள் பயன்பெறுவர். பெரியநாயக்கன்பாளையத்தில் 376 மாணவர்கள், ஆனைமலையில் 219 பேர், மதுக்கரையில் 169 பேர், பொள்ளாச்சி வடக்கில் 41 பேர், அன்னுார் வட்டாரத்தில் 105 பேர், பேரூர் வட்டாரத்தில் 40 பேர், கோவை மாநகரில் 23 பேர், வால்பாறையில் 92 பேர், சூலுாரில் 9 பேர், சுல்தான்பேட்டையில் 93 பேர் என மாவட்டத்தில், 1,627 பேர் இதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X