மாவட்ட டென்னிஸ்;  தன்விகா முதலிடம் 

Added : பிப் 11, 2020
Advertisement
 மாவட்ட டென்னிஸ்;  தன்விகா முதலிடம் 

கோவை:மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்விகா முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தேர்வானார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி, குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்தது. ஆண்கள் பிரிவில், 23 பேரும், பெண்கள் பிரிவில் 7 பேரும் போட்டியில் பங்கேற்றனர்.

நேற்று நடந்த முதல் 'லீக்' போட்டியில், கவின், 8-2 என்ற புள்ளி கணக்கில், கார்த்திக் குமரனையும்; 2வது போட்டியில், பூபதி 8-6 என்ற புள்ளி கணக்கில், எல்.ஆர்., பாலாஜியையும் வென்றனர்.3வது போட்டியில், பாலாஜி, 8-7 என்ற புள்ளி கணக்கில், கவினையும்; 4வது போட்டியில், பூபதி, 8-7 என்ற புள்ளி கணக்கில், கார்த்திக் குமரனையும் வென்றனர்.

மாணவியர் பிரிவு'லீக்' போட்டியில் அதிக வெற்றி பெற்ற தன்விகா முதலிடம், ஹரிவர்ஷனி இரண்டாமிடம், காயத்ரி மூன்றாமிடம் பிடித்து அசத்தினர். சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தேர்வாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X