கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட்: காலிறுதியில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி

Added : பிப் 11, 2020
Advertisement
 கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட்: காலிறுதியில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி

கோவை:மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி.,தொழில்நுட்ப கல்லுாரி அணி, 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின், 2ம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், கல்லுாரி மைதானத்தில் நடந்தன. 38 அணிகள் பங்கேற்றன.* நேற்று நடந்த போட்டியில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, எஸ்.என்.ஜி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஸ்ரீகிருஷ்ணா அணி, முதலில் 'பேட்டிங்' செய்ய முடிவு செய்தது.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன்களை சேர்த்தனர். ஆட்ட நேரமுடிவில், 18.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 119 ரன் எடுத்தது. அணியில் அதிக பட்சமாக கவுசிக் (36), வெங்கடேஷ் (34) ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய எஸ்.என்.ஜி.சி., அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தனர்.17.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 78 ரன் மட்டுமே எடுத்தது. ஸ்ரீகிருஷ்ணா அணி, 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சிறப்பாக பந்து வீசிய சுரேஷ்குமார், கவின் ஆகியோர் தலா, இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம், ஸ்ரீகிருஷ்ணா அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X