கபடி அமெச்சூர் கழகம் சார்பில் சடுகுடு; வீரர்கள் சுறுசுறு | Dinamalar

கபடி அமெச்சூர் கழகம் சார்பில் சடுகுடு; வீரர்கள் 'சுறுசுறு' 

Added : பிப் 11, 2020
Share
 கபடி அமெச்சூர் கழகம் சார்பில் சடுகுடு; வீரர்கள் 'சுறுசுறு' 

கோவை:கோவை மாவட்ட கபடி அமெச்சூர் கழகம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில் நடந்த, முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில், 22 அணிகள் பங்கேற்றன.நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், கணுவாய் கே.சி.கே., 'பி' அணி, 33-12 என்ற புள்ளி கணக்கில், சி.எம்.எஸ்., அணியையும்; 2வது போட்டியில், கிருஷ்ணபுரம் கே.சி.சி., அணி, 22-20 என்ற புள்ளி கணக்கில், தடாகம் ஹரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும் வென்றன.

3வது போட்டியில், தோலம்பாளையம் நரேன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 33-14 என்ற புள்ளி கணக்கில், ரத்தினபுரி வீரத்தமிழன் அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X