ஒமர் அப்துல்லா வழக்கு இன்று விசாரணை

Added : பிப் 11, 2020
Advertisement

புதுடில்லி : தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்குஎதிர்ப்பு தெரிவித்து, அவரது தங்கை சாரா அப்துல்லா தொடர்ந்துள்ள வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆக.,5ல் நீக்கப்பட்டது.முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,முன்னாள் முதல்வர்களானபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்திஉள்ளிட்டோர்வீட்டுக் காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.இதில்,பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஒமர் அப்துல்லா,மெஹபூபா முப்தி ஆகியோரும், சமீபத்தில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டனர்.இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, ஒரு ஆண்டுக்கு எந்த விசாரணையும் இன்றி, சிறையிலோ, வீட்டுக்காவலிலோவைத்திருக்க முடியும்.

ஒமர் அப்துல்லா மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரது தங்கை சாரா அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X