'நாடு கடத்தும் தீர்ப்பில் குளறுபடி' ; விஜய் மல்லையா வழக்கறிஞர் வாதம்

Added : பிப் 11, 2020
Advertisement
 'நாடு கடத்தும் தீர்ப்பில் குளறுபடி' ; விஜய் மல்லையா வழக்கறிஞர் வாதம்

லண்டன் : 'விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தீர்ப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன' என, அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திரும்பத் தராமல், லண்டனுக்கு தப்பியோடி விட்டார். இதையடுத்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், 'விஜய் மல்லயாவை நாடு கடத்த வேண்டும்' என, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளேர் மான்ட்கோமரி செய்த வாதம்:விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காகவே வங்கியில் கடன் பெற்றார். அவர் ஏமாற்றும் எண்ணத்தில் கடன் பெறவில்லை. அவர், நள்ளிரவில் தப்பியோடும் அளவிற்கு மோசமானவர் அல்ல ; வசதியானவர். அவர், 'பொன்ஸி' திட்டம் போல, மோசடி திட்டத்தை நடத்தவில்லை.மதிப்புமிக்க விமான நிறுவனத்தை நடத்தியவர். பொருளாதார சீர்குலைவால், இதர விமான நிறுவனங்கள் போல, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நலிவடைந்தது.

அவரை நாடு கடத்த உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி, அனைத்து சாட்சிகளின் வாதங்களையும் சரிவர ஆராயவில்லை. அவ்வாறு செய்திருந்தால், ஏராளமான குளறுபடிகள் உள்ள தீர்ப்பை வழங்கியிருக்க மாட்டார். சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, விஜய் மல்லையா மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகள் சரியானவையா என, மீண்டும் ஆராய வேண்டி உள்ளது.அவ்வாறு ஆராய்ந்தால், ராகேஷ் அஸ்தானா மீதே, சரிவர நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்புள்ளது.

எனவே, சரிவர ஆராயாமல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய குளறுபடி தீர்ப்புக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். இவ்வழக்கில், இன்றும், நாளையும் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நேற்று, விஜய் மல்லையா நீதிமன்றத்திற்கு நேரில் வந்திருந்து, வழக்கறிஞர்களின் வாதத்தை கூர்ந்து கவனித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X