பலாத்கார, 'வீடியோ' சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Added : பிப் 11, 2020
Advertisement

புதுடில்லி : பாலியல் பலாத்கார, 'வீடியோ' வெளியிடப்படுவதை தடுப்பது குறித்து, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்படாததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைத் சேர்ந்த, 'பிரஜாவலா' என்ற அரசு சாரா அமைப்பு, 2015ல், அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த, எச்.எல். தத்தாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்பான வீடியோ, இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறித்து, அந்தக் கடிதத்தில் புகார் கூறப்பட்டது.அதையடுத்து, இதை வழக்காக எடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகின்றது.

இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.'இந்த விவகாரம் தொடர்பாக, சமூக வலை தளங்கள் மற்றும் இணையதள நிறுவனங்களுடன் பேச்சு நடத்தும்படி உச்ச நீதிமன்றம், 2018 டிச.,ல் உத்தரவிட்டும், இதுவரை அதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்படவில்லை' என, பிரஜாவலா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த அமர்வு, 'கூகுள், வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கும்படி, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறியது. வழக்கின் விசாரணை, நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X