அக் ஷயா 'அலுமினி டிராபி' பண்ணாரி அம்மன் முதலிடம்

Added : பிப் 12, 2020
Advertisement
 அக் ஷயா 'அலுமினி டிராபி'  பண்ணாரி அம்மன் முதலிடம்

கோவை:மாநில அளவிலான பூப்பந்து போட்டியில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி அணி, முதலிடத்தை தட்டி சென்றது.
கிணத்துக்கடவு, அக் ஷயா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின், முன்னாள் மாணவர்கள் சார்பில், 3ம் ஆண்டு மாநில பூப்பந்து போட்டி, முதலாம் ஆண்டு மாவட்ட வாலிபால் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது.

ஈரோடு, கோவை, சென்னை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.பூப்பந்துஇறுதிப்போட்டியில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், சென்னை அண்ணா பல்கலை அணியை வென்றது.போட்டியின் முடிவில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி அணி முதலிடம், சென்னை அண்ணா பல்கலை அணி இரண்டாமிடம், அக் ஷயா இன்ஜி., தொழில்நுட்ப அணி மூன்றாமிடம் பிடித்தன.

வாலிபால்

இறுதிப்போட்டியில், அக் ஷயா அலுமினி அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.போட்டியின் முடிவில், அக் ஷயாஅலுமினி அணி முதலிடம், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடம், ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரியின் முதல்வர் ஜெயா, டீன் கதிரவன் ஆகியோர் கோப்பைகள், ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.போட்டி ஒருங்கிணைப்பாளராக, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் காயத்ரி செயல்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X