ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் அச்சுறுத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement

நியூயார்க் : 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தீவிரமாக செயல்படுகிறது. இவர்களால், ஆப்கனின் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் உள்ளது' என, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால், சர்வதேச நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ்., அமைப்பின் ஒரு பிரிவான, ஐ.எஸ்.ஐ.எல்.கே., என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த, 1,400 பேரை, ஆப்கன் பாதுகாப்பு படையினர் கைது செய்து, தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், ஆப்கனை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தியா, பாகிஸ்தான், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பு, ஆப்கனில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன், இந்த அமைப்பினர் தொடர்பு வைத்துள்ளனர். அதன் மூலமாக, தங்கள் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், தெஹரீக் - இ - தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களால், தெற்காசியாவில் உள்ள ஆப்கனின் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்த அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X