வெற்றிகளை குவித்த நாச்சிமுத்து கல்லுாரி

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை:மாநில அளவில் அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவிகளுக்கான ஹேண்ட்பால் மற்றும் வாலிபால் போட்டியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, முதலிடம் பிடித்தது.

இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையோன, டேபிள்டென்னிஸ், செஸ், கேரம், பாட்மின்டன், வாலிபால், கூடைப்பந்து பல்வேறு வகையான போட்டிகள், துாத்துக்குடி மாவட்டம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்தன.

ஆறு மண்டலங்களில் முதல் இடம் பிடித்த அணிகள் பங்கேற்றன. கோவை மண்டலத்தின் சார்பில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, மாணவிகள் பிரிவில் கோ- கோ மற்றும் ஹேண்ட்பால் போட்டியில், முதலிடம் பிடித்தது.டேபிள் டென்னிஸ், செஸ், பாட்மின்டன், பூப்பந்து ஆகிய போட்டிகளில், இரண்டாமிடம் பிடித்து அசத்தினர். தடகள போட்டி, 4X100 தொடர் ஓட்டம் மற்றும் 400 ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும்; 100மீ., தடை தாண்டி ஓட்டத்தில், வெண்கலம் பதக்கமும் வென்றனர்.

வெற்றி பெற்ற வீராங்கனையை, கல்லுாரி செயலாளர் ராமசாமி, முதல்வர் மணிவண்ணன், உடற்கல்வி இயக்குனர் தேவராஜன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X