பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் கடன் அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை:பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெறலாம் என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு, உழவர் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் கடந்த, 8ம் தேதி துவக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு, 15 நாட்களுக்குள் உழவர் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.இந்த கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விவசாய/ சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி, கடன் அட்டையை மானிய சலுகையுடன் பெறலாம்.

ஏற்கனவே பெற் றவர்கள், கடன் உச்சவரம்பை அதிகரித்துக்கொள்ளலாம். செயலிழந்த அட்டை உடையவர்கள், செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள், நில ஆவணம், அடங்கலுடன் அணுகவேண்டும்.கால்நடை, மீன் பிடிப்பு பராமரிப்பு செலவுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்க்கவும் அணுகலாம். பொதுசேவை மையம் மூலமாகவும், விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X