சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுவடை இயந்திர உரிமையாளர் கொலை

Added : பிப் 12, 2020
Advertisement

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே, நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த விட்டலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர், உறவினரான, திருச்சியைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவரது, 2.5 ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி செய்திருந்தார். அஞ்சம்மாளுக்கு பணம் தேவைப்பட்டதால், நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த ரெமோ, 50, என்பவரிடம் விற்று விட்டார்.நேற்று முன்தினம், மனோகரன் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது, 'நிலத்தை நான் வாங்கி விட்டதால், நான் தான் அறுவடை செய்வேன்' என, ரெமோ கூறினார். நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் அறுவடை செய்ய முயன்றார்.அப்போது, மனோகரன் தரப்பினர் தகராறில் ஈடுபட்டனர்.

அறுவடைக்கு வந்திருந்த, அறுவடை இயந்திரத்தின் உரிமையாளர், நாகையைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை அடித்து கீழே தள்ளினர். தலையில் பலத்த காயமடைந்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காளிமுத்து, நேற்று மாலை இறந்தார். திருநீலக்குடி போலீசார், மனோகரன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X