ஹபீஸ் சயீது கோரிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement

லாகூர் : 'பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, தன் மீது தொடர்ந்துள்ள ஆறு வழக்குகளின் விசாரணையை முடித்த பின், மொத்தமாக தீர்ப்பு வழங்க வேண்டும்' என, ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது விடுத்த கோரிக்கையை, பாகிஸ்தானில், லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

கடந்த, 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, மூளையாக செயல்பட்டவர் ஹபிஸ் சயீது.இவர், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றங்கள் தொடர்பாக, 2019ல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான இரண்டு வழக்குகளின் விசாரணை முடிவடைந்து, கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ஹபீஸ் சயீத், லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், 'பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, தன் மீதும், கூட்டாளிகள் நான்கு பேர் மீதும் உள்ள, இதர நான்கு வழக்குகளின் விசாரணையை முடிக்க வேண்டும்.'அதுவரை, விசாரணை முடிவடைந்த இரு வழக்குகளின் தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு, நேற்று லாகூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஹபீஸ் சயீது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதர நான்கு வழக்குகளில், சாட்சிகளின் விசாரணையை, இன்று முதல் துவக்க உத்தரவிட்டது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

'சாட்சி விசாரணை முடிந்த இரு வழக்குகளின் தீர்ப்பை உடனே வெளியிட வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார். அதை நிராகரித்த நீதிமன்றம், சாட்சிகளின் குறுக்கு விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறும், அதன் பின், ஆறு வழக்குகளின் தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X