தமிழ்நாடு

காயகல்ப், லட்சயா விருதுகள் பெறத்தகுதி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகாரம்

Added : பிப் 12, 2020
Advertisement

கம்பம், :சிறப்பான செயல்பாட்டிற்காக காயகல்ப் மற்றும் லட்சயா விருதுகள் பெற கம்பம் அரசு மருத்துவமனை தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரசவ வார்டுகள் முறையாக, தேவையான வசதிகளுடன் செயல்படும் பட்சத்தில் அந்த மருத்துவமனைக் லட்சயா விருது வழங்கப்படுகிறது. அதேபோல அரசு மருத்துவமனையின் ஒட்டுமொத்த பிரிவுகளும் சரியாக செயல்படுகிறது என்றால், அதற்கு காயகல்ப் விருது முதற்கட்டமாகவும், இரண்டாவதாக தேசிய தரச்சான்று விருதும் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில்கம்பம் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் லட்சயா விருதுக்காக தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பிரசவ வார்டு செயல்பாடுகளுக்கு திருப்தி தெரிவிக்கப்பட்டது. இரண்டாவதாக காயகல்ப் விருதுக்குசமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர். அந்த விருதுக்கு 100 க்கு 96 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. எனவே இருவிருதுகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.தீவிரம்:மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, மாவட்டத்தில் இந்த அரசு மருத்துவமனையில்தான் அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு 200 பிரசவங்கள் நடைபெறுகிறது. 'சீமாங்' சென்டர் அந்தஸ்து பெற்றுள்ளது. 24 மணி நேரமும் சிசேரியன் செய்ய மயக்கவியல் மற்றும் அறுவைச் சிகிச்சை டாக்டர்கள், ரத்தவங்கி, சிசுபராமரிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.எனவே லட்சயா மற்றும் காயகல்ப் விருதுகள் கிடைக்கும். அதைவிட தேசிய தரச்சான்று விருதுக்கு மருத்துவ அலுவலர் பொன்னரசன் தலைமையிலான ஒட்டுமொத்த நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X