பொது செய்தி

தமிழ்நாடு

கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையம் அமையுமா?

Added : பிப் 12, 2020
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், வெளியூர் செல்லும் ரயில்களுக்கான முன் பதிவு மையம் துவங்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் துவங்கி மூன்று ஆண்டுகளாகி விட்டது. இவ்வழியாக கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயிலும், கோவையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலும் இயங்கி வருகிறது. கூடுதலாக சிறப்பு ரயில்கள் மற்றும் கூட்ஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது.

கிணத்துக்கடவை சுற்றிலும் உள்ள கிராம மக்கள், சென்னை, பெங்களூரு மற்றும் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் வேலைக்காக சென்று வருகின்றனர். இதற்காக வெளியூர் செல்லும் ரயிலில் பயண சீட்டு முன் பதிவு செய்வதற்காக, கோவை, பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.இணையதளம் வழியாக முன்பதிவு செய்தால், அதிகளவில் பயணசீட்டு முன் பதிவு செய்ய முடியாமல், காத்திருப்போர் பயணசீட்டுகளே கிடைக்கிறது.

இதனால், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையம் துவங்கினால், இப்பகுதி மக்கள் எளிதாக வெளியூர் செல்லும் ரயில்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். இதற்கு, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X